எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்? Tucson, Arizona USA 65-1121 1சகோதரன் கிரீன் (Green) உங்களுக்கு நன்றி. இது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. சகோதரன், மற்றும் சகோதரி கிரீனுக்கும், மற்றும் இந்தக் காலையில் இங்குள்ள யாவருக்கும் ஒரு வாழ்த்துதல். ஒரு சில அறிவிப்புகளைக் கூறும்படியாக இந்த ஆராதனை ஸ்தலத்திற்கு வருவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறதை நான் உணருவது என்பதே ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. இங்கு நான் சகோதரன் கிரீனுடைய நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் சகோதரன் கிரீன் பேசுவதை நான் பலமுறைகள் கேட்டிருக்கிறேன், அவர் கர்த்தருடைய வார்த்தையை நமக்கு கொண்டு வந்தபோது, நான் நிச்சயமாகவே பயனடைந்தேன், அதைக் குறித்து மிகவும் தாழ்மையாகவேயிருந்தார். நேற்று அவர், ''நான் கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையை பெற்றுக்கொள்ளவில்லை. அது அனுப்பப்பட்டிருக்கின்றதைப் போலவே, ஆனால் அது வெளிப்பாட்டில் வரலாம்“, என்றார். தொடர்ந்து, ''நான் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்பதன் பேரில் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்” என்றார். அவர், ''பவுல் வேதாகமத்தில் ஏதோ ஒன்றை எழுதினது போன்றே, அவன் என்ன கூறினான் என்பதன் பேரில் வலியுறுத்திக் கூறுவதற்கே நான் இங்கு வருகிறேன்“ என்றார். தொடர்ந்து, ”என்னிடத்தில் எந்த செய்தியும் இல்லை, கர்த்தரிடத்திலிருந்து ஏற்கெனவே என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதன் பேரில் வலியுறுத்திக் கூறுவதற்கு மாத்திரமே சரியாக வந்துள்ளேன்“ என்றார். இப்படிப்பட்ட ஒரு வாலிப நபர், அப்படிப்பட்ட ஒரு குறிப்பை அவர் கூறுவதை கேட்பது உண்மையாகவே குறிப்பிடத்தக்கது என்று நான் எண்ணினேன். இப்பொழுது நாம் அப்படியே ஒருசேர ஜெபத்தில் தரித்திருப்போம். 2அன்புள்ள தேவனே, எப்படி துவங்க வேண்டும் என்பதையே என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இன்றையதினம் நீர் இங்கிருப்பதை நான் உணருகிறேன், உம்முடைய சமூகத்தில் நாங்கள் மிகவும் அற்பமானவர்களாயிருப்பதையே எப்பொழுதும் உணருகிறோம். நான் இந்த சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, நீரே இந்த இடத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர், நாங்கள் இங்கு சந்திக்கிற ஒவ்வொரு முறையும் நீர் எங்களோடு தொடர்புகொள்ளுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய மகத்தான ஆவியானது இந்தப் பட்டிணம் முழுவதும் அசைவாடுவதாக! இந்தக் கடைசி நாட்களில் எங்களுடைய கரங்களில் அளிக்கப்பட்டதும் எங்களிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதுமான இந்த சுவிசேஷ செய்தியை நாங்கள் எடுத்துச் செல்ல வல்லமையுள்ளவர்களாக இருப்போமாக, இது நிறைவேற்றப்படுவதாக, நீர் ஜீவனுக்கென்று நியமித்திருக்கின்ற ஒவ்வொரு ஆத்துமாவையும் டூசானிலிருந்தும் மற்றும் சுற்றுப்புறங்களி லிருந்தும் ஆதாயமாக்கிக் கொள்வீராக. பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் காரியங்களை அருளும். ஆமென். 3நான் இந்த வார்த்தைகளை கூறவேண்டும் என்று விரும்பி கூறுவதற்கு சற்று முன்னர் இந்தக் காலையில் நான் இங்கு ஒரு சிறு வேத வாக்கியத்தை நான் வாசிக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் 7-ம் அதிகாரத்தில், அது அப்போஸ்தலரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதற்கு திருப்பிக் கொண்டிருக்கையில், நாம் 44-வது வசனத்திலிருந்து துவங்குவோம். இப்பொழுது, நாங்கள் ஒரு தொடர்கூட்ட ஆராதனைகளுக்காக வருகின்றதான இந்த வாரத்தில், இந்த வாரம் லீவர்போர்ட்டுக்கு (Sheverport) போகிறோம், இப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் முயற்சிக்கப் போகிறோம். சகோதரன் மூர், சகோதரன் ஜேக் மூர் (Jack Moore) எனக்கும் சகோதரன் பியரி இருவருக்குமே மிக நல்ல ஒரு நண்பர், நாங்கள் சகோதரன் ஜேக்கை நேசிக்கிறோம். செய்தியானது, விசேஷமாக நாம் விலையேறப்பெற்றதாயும், விசுவாச மாயும், உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கிற சில காரியங்களின் பேரில், அதாவது - “சர்ப்பத்தினுடைய வித்து” மற்றும் “விசுவாசிகளின் நித்திய பாதுகாப்பு” போன்றதான இந்த செய்திகளில் சில, இப்படிப்பட்ட தானவைகள், அது ஏழு முத்திரைகளின் திறப்பினூடாகவே அது நமக்கு வெளிப்பட்டது என்று நாம் அதை விசுவாசிக்கின்ற காரணத்தால், அது அவருக்கு ஒருவிதமான சிறு குழப்பத்தை ஏற்படுத்தினது என்று நான் எண்ணுகிறேன். இது மற்றவர்களுக்கும் கூட அப்படியிருக்கலாம் .......... இது கடின மாயிருக்கிறது என்று நாம் நினைக்கிறதில்லை, ஆனால் இதற்கு, நீங்கள் சத்தியத்திற்கு உங்களுடைய இருதயத்தை திறந்துகொடுக்கத்தான் வேண்டும். நாம் கடைசி காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். அது சரியாக நமக்கு மிகவும் தத்ரூபமாமனதாய் இருக்கிறது, அதாவது நாம் சரியாக பாதையின் முடிவிலே இருக்கிறோம். 4மற்ற யாரோ ஒரு மனிதனுடைய சபையில் பேசுவதற்கு, நல்லது, அவருடைய சபைக்கு வர உங்களுக்கு கொடுக்கப்படுகின்ற தருணத்தைக் குறித்து, நீங்கள் அந்த மனிதனுடைய விருந்தோம்பும் பண்பை கனப்படுத்துவதற்கு விரும்புகிறீர்கள். நான் நிச்சயமாகவே, அவர்கள் அதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிவேன், ஆனால் நான் அவர்களுக்கு போதுமான கனத்தை செலுத்துவேன் ....... மேலும் அதை உள்ளே கொண்டுவரும்படியாய் நான் அங்கே பேசக்கூடியது மிகவும் அதிகமாகவே இருக்கிறது; அது சரியாக பரிசுத்த ஆவியானவர் அதனை சிறிது தூண்டிவிட நேர்ந்தால் மட்டுமே, நீங்கள் பாருங்கள், அப்பொழுது நான் அவர் கூறினது போலவே நிச்சயமாகக் கூறுவேன். அதைச் செய்வதைக் காட்டிலும் மேலான ஒன்றை நான் அறிந்திருக்கவில்லை, அதைச் செய்வதைக் காட்டிலும் மேலான எதையுமே நான் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். புரிகின்றதா? அவர் அதை கூறுகிற விதமாகவே நாம் அதை அப்படியே கூறுவோமாக. 5இப்பொழுது நாம் இங்கு சரியாக அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் 7ம் அதிகாரத்திலிருந்து, 44-வது வசனத்துவங்கி, ஒரு வசனம் இல்லை இரண்டு வசனங்களை வாசிப்போமாக. மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாக துரத்திவிட்ட புறஜாதி களுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்கையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்ட வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சாலமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமா யிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்க வில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. 6இதன் பேரில், இந்த வேதவாசிப்பின் பேரில், நான் கூறவிரும்புகிற ஒரு சில வார்த்தைகளை சகோதரன் பியரி காலை செய்தியைக் கொண்டு வருகிறதற்கு முன்பே நான் கூற விரும்புகிறேன். இது என்னுடைய டூசான் விஜயத்தின் மகத்தான சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதை நான் கண்டறிகிறேன். நான் இங்கு வருவதற்கு வழிநடத்தப்பட்ட காரணத்தால் நான் இங்கு வந்திருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு தரிசனத்தின் மூலமாக என்னை இங்கு அனுப்பின காரணத்தால் நான் இங்கு வந்திருக்கிறேன். ஒருகால் இது விநோதமாக தென்படலாம் என்பதை நான் அறிவேன். ஆனால் அவரோ, நான் அறிந்தமட்டில் தேவனைக் குறித்து நான் அறிந்த எந்தக் காரியமும், நான் ஒரு தரிசனத்தால் டூசானுக்கு அனுப்பப்பட்டேன். எப்படி நான் இந்த பாலைவனமான இடத்திற்கு அனுப்பப்பட்டேன் என்று நான் வியந்திருக்கிறேன். ஆகையால் இங்கேதான் ...... ஆவிக்குரிய பிரகாரமாக பேசுகிறேன், இந்த நகரம் முழுவதுமே, ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்திருப்பதில் டூசான் நகரத்தைக் காட்டிலும் வேறெந்த இடத்தையும் நான் அறியேன். சபைகளுக்கிடையே சண்டைகள் இருக்கின்றன. சபைகளுக்கிடையே மட்டுமீறிய அமளிகள் உள்ளன. ஒற்றுமையே இல்லை, ஒவ்வொருவரும் சுரண்டல், முதலீட்டு பங்கை கைக்கொள்ளுதல், வலிந்து பணம் பறித்தல், இந்த ஒன்றை பெறவும், மார்க்கத்தானாக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆவிக்குரிய பிரகாரமாக பேசினாலும் கூட இது ஒரு பாலைவனமாகவே இருக்கிறது. 7ஆனால் அவ்வண்ணமே நான் வேதாகமத்தில் வாசித்தேன், அதாவது அங்கே மோசே தன்னுடைய அன்பானவர்களிடத்திலிருந்தும், அவனுக்கு அருமையானவர்களாயிருந்த எல்லோரிடத்திலுமிருந்து தேவனால் அழைக்கப்பட்டு, வேதாகமத்தின் நியாயப்பிரமாணங்களை எழுதுவதற்கு அவன் வனாந்திரத்திற்குள்ளாக அனுப்பப்பட்டான். அது பழைய ஏற்பாடாய் இருந்தது, முதல் நான்கு புத்தகங்களான ஆதியாகமம், லேவியராகமம், உபாகமம், யாத்திராகமம் ஆகும். அவன் ......... நான் அவைகளை சரியாக ஒழுங்காக கூறவில்லை, ஆனால் அந்த நான்கு புத்தகங்கள்தான். அது உண்மையாகவே பழைய ஏற்பாடாய் இருக்கிறது. ஏனென்றால் அதில் மற்றவைகள் தீர்க்கதரிசிகள் என்ன கூறினர் என்பதும், தாவீதின் சங்கீதங்களும் மற்றும் இராஜாக்களின் நாளாகமங்கள் போன்றவைகளுமாய் இருக்கின்றன. ஆனால் இவைகளோ பழைய ஏற்பாட்டின் அடிப்படைக் கூறுகளாய் இருந்தன. மோசே தன்னுடைய தாய்நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட பிறகே அவன் அவைகளை எழுதினான், அங்கே அவன் பிறந்து, தன்னுடைய ஜனங்கள் மத்தியில் கொண்டுவரப்பட்டு, இந்த பழைய ஏற்பாட்டு புத்தகத்தை எழுத வனாந்திரத் திற்குள்ளாக அனுப்பப்பட்டான். 8அதன் பின்னர் நான் புதிய ஏற்பாட்டில் அதை கண்டறிகிறேன், அங்கே பவுல் அதன் ஆக்கியோனாய் இருக்கிறான் இல்லை ஆக்கியோனாய் அல்ல, ஆனால் புதிய ஏற்பாட்டினை எழுதினவனாய் இருக்கிறான். அவனும் கூட தன்னுடைய ஜனத்தாரின் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, ஆவியினாலே அரபிதேசத்திற்குள்ளாகச் சென்று, ஆவியின் ஏவுதலைக் கண்டறிய அங்கே அவன் மூன்றரை வருடங்கள் இருந்தான். பவுல் புதிய ஏற்பாட்டின் முதன்மையான எழுத்தாளனாய் இருக்கிறான். இப்பொழுது, மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவானுமிருந்தனர், ஆனால் அவர்கள் வேதபாரகராய் இருந்து, அவர்கள் இயேசுவை முழுவதுமாக பின்தொடர்ந்தபோது அவர் என்ன கூறினார் என்பதையே சரியாக எழுதினர். ஆனால் நீங்கள் தீமோத்தேயுவிற்கு எழுதின புத்தகம் மற்றும் ரோமர்களுக்கு, எபிரேயர்களுக்கு எழுதின புத்தகம் முதலியவற்றை எடுத்துக்கொண்டால், பவுல் புதிய ஏற்பாட்டை எழுதுவதற்கு ஆவியின் ஏவுதலைப் பெற்றான்; பழைய ஏற்பாடு எல்லாவற்றையும் ஒரு நிழலாக எடுத்து அதை வரிசைப்படி இணைத்துக் காட்டினான். தேவன் அதை கனப்படுத்தினார், அது புதிய ஏற்பாடாய் ஆக்கப்பட்டது. இப்பொழுது, பழைய ஏற்பாட்டிற்கு துரத்தப்பட வேண்டியிருந்த தானால், ....... எழுத்தாளர் தம்முடைய ஜனங்களிடமிருந்து துரத்தப்பட வேண்டியதாய் இருந்து, பழைய ஏற்பாட்டை எழுதுவதற்கான ஆவியின் ஏவுதலைப் பெற வனாந்திரத்திற்குள் துரத்தப்பட வேண்டியதாய் இருந்தது. புதிய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டை எழுதுவதற்கான ஆவியின் ஏவுதலைப் பெற ஒரு பாலைவனமான இடத்திற்குள்ளாக எழுத்தாளர் ஆக்கியோனால் துரத்தப்பட்டார். புத்தகங்கள் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருக்கின்றன; இந்த கடைசி நாட்களில் அந்த ஏழு முத்திரைகளை திறப்பதற்கு, அதற்கு அதே மாதிரியானது தேவைப்படுகிறதாயும் கூட இருக்கும். நீங்கள் எதை அருமையாய் பற்றியிருக்கிறீர்களோ, நீங்கள் எதை போற்றி வளர்க்கிறீர்களோ, அதை விட்டுவிட வேண்டும், ஒரு சிறிய வீடு ஜனங்களால் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது, என்னுடைய எல்லா ஜனங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும், செழித்தோங்கியிருந்த ஒரு சபை இருந்தது, ஒன்றுமே குறைவற்றதாய் இருந்தது; அதை விட்டுச் செல்வதற்கு அதிலிருந்து தூரமாக இழுக்கப்பட்டு, தூரமாய் இடம் பெயர்ந்து, ஒருவரையும் அறிந்திராத ஒரு பாலைவனத்திற்குள்ளாக செல்லவேண்டியிருந்தது, ஒவ்வொரு காரியமும் எதிராகவே இருந்தது. 9ஆனால் தேவனைக் குறித்த ஏதோ காரியம் உண்டு, அதாவது அவர் ஒரு மனிதனை அவனுடைய எந்த சொந்தமான சிந்தனைக்கும் அப்பால் உள்ள காரியங்களையே செய்யும்படி துரத்துகிறார், ஆகவே அது தேவனுடைய கனமாயும், மகிமையாயும் இருக்கமுடியும். நான் அதை உணருகிறேன், சுயகனத்திற்காக அல்ல, ஆனால் நான் - நான் எனக்கு அருமையானவை என்றழைக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிருந்து, இந்த வனாந்திரத்திற்குள்ளாக இங்கு வந்து, நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் துன்பப்பட்டிராத தைப்போல இந்த வனாந்திரத்தில் இங்கே அல்லது இந்த பாலைவனத்தில் துன்பப்படுகிற இதை ஒரு சிலாக்கியமாகவே உணருகிறேன். ஆனால் நான் அதைச் செய்கிறதிலும், தேவன் என்ன செய்யும்படி கட்டளையிட்டார் என்பதற்கு கீழ்ப்படிவதிலும் விசுவாசமாயிருக்கிறேன், தேவன் இந்த கடைசி நாளின் இரகசியங்களை நமக்கு திறந்து கொடுத்திருக்கிறார். நாம் இந்த செய்தியோடு இங்கே இருக்கிறோம். இப்பொழுது, என்னைப் பின்பற்றினவர்கள் அநேக ஜனங்களாய் இருந்தனர், அது வழக்கத்திற்கு மாறானதல்ல. வழக்கமாகவே ஒரு நபரை நாம் ... ஜனங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், அது அன்பு, அது நீங்கள் செய்ய நினைக்காத காரியங்களை நீங்கள் செய்யும்படி உங்களைத் துரத்தும். உங்களில் அநேகர் உங்களுடைய வீடுகளை விட்டுவிட்டீர்கள், நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வெறுமென போவதற்காகவே இங்கே பாலைவனத்திற்குள்ளாக வந்திருக்கிறீர்கள். 10அநேகர் என்னை அழைத்திருக்கின்றனர், அநேகர் என்னிடத்தில், ''நாங்கள் அரிசோனாவிற்கு வரலாமா? அது எங்களுக்கான ஒரு நல்ல இடமாக இருக்குமா?“ என்று கேட்டுள்ளனர். நல்லது, அது கிட்டத்தட்ட மோசேயினிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கூறப்பட்டதைப்போன்றே யுள்ளது, அது கனியுள்ள இடமாயில்லாமலும், மாதுளம்பழமுள்ள இடமாயில்லாமலும் இருந்தது. இங்கே செய்வதற்கு மிகுந்த வேலை இல்லை, வாழ்க்கைத் தேவை மிகுதியாய் இருக்கிறது, வாழ்க்கைத் தேவைக்குரிய செலவினங்கள் மிகுதியானதாய் இருக்கிறது. இது அரிசோனா, டூசானில் இது உண்மையாகவே ஜீவிப்பதற்கு ஒரு கடினமான இடமாக இருக்கிறது. உழைப்பூதியம் குறைவானதாய் இருக்கிறது, உணவும், வாடகையும் விலையுயர்ந்ததாய் இருக்கின்றன. அந்த வகையில் இது ஜீவிப்பதற்கு ஒரு பயங்கரமான இடமாய் இருக்கிறது, ஆனால் இது உடல் நலத்திற்கு உதவுகிற இடமாய் இருக்கிறது, இது வறண்ட இடமாயும் இருக்கிறது. மேலும் நாம் சில நேரங்களில் ......... நாம் நம்முடைய சிந்தனைகளை இந்த பூமிக்குரிய காரியங்களின் மேல் உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. 11நாம் ஒரு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையே நோக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் இங்கு வருகிறதில் ஒரு காரியம் என்னைத் தொல்லைப்படுத்தியது, நல்லது, அது, “நீங்கள் வர வேண்டாம்” அல்லது “நீங்கள் வர வேண்டும்” என்று ஜனங்களிடம் கூறுவதேயாகும், அதாவது நான் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும் தேவன் அந்த தனிப்பட்ட நபர் செய்ய வேண்டியதை வழிநடத்துகிறவிதமாகவே விட்டுச் செல்கிறேன். நான் நம்மில் ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதன் பேரில் ஆவியினால் நடத்தப் பட வேண்டுமென்றே எண்ணுகிறேன். இங்கே இருக்கின்ற உங்களில் அநேகர் ஜெபர்சன்வில்லைச் சுற்றிலுமிருந்தும், அங்குள்ள சபையிலிருந்தும் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இப்பொழுது என்னை தொல்லைப்படுத்தின அந்தக் காரியம் ஒரு ஆராதனை ஸ்தலமாய் இருந்தது. ஸ்தேவானைக் குறித்தும், அவனுடைய மரணத்திற்கு சற்று முன்னதான அ வனுடைய பிரசங்கத்தைக் குறித்தும் நான் இங்கு வேதத்தில் வாசித்த காரணத்தால் நான் தெளிவாக உணருகிறேன்; ஏனென்றால் பின்னர் அவர்கள் அவனுடைய செய்திக்காக, அவனை உடனடியாக கல்லெறிந்தனர். அவன் பேசிக் கொண்டிருக்கையில், அவன், “நம்முடைய பிதாக்கள்” பூர்வ நாட்களிலிருந்த எபிரேயர்களைக் குறித்துப் பேசுகிறான், எப்படியாய் அவர்கள் ஆராதனைக்காக ஒரு ஸ்தலத்தைக் கட்டுவதற்கு தேவனுக்கு முன்பாக தயை பெற முயற்சித்தனர். அவர் “சாலமோன் அவருக்கு ஆலயத்தை இல்லை ஒரு கட்டிடத்தைக் கட்டினான் என்று கூறினான்” என்றான். நாம் அந்த செய்தியை அறிந்தவர்களாயிருக்கிறோம். 12ஆனால் நான், “ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்” என்ற அவனுடைய அடுத்த வார்த்தைகளை விரும்புகிறேன், அது ஏசாயாவில் மற்றொரு இடத்திலும் இருக்கிறது. அவர், “நீர் ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்; பாருங்கள், பலி, காணிக்கைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவை யிருந்தும், ஆனால் நீர் ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்” என்றார். நல்லது, அப்பொழுது அவன் அங்கே தேவன் கிறிஸ்துவில் வாசம் செய்த சரீரத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தான் என்பதை நாம் உணருகிறோம். ஆனால் இன்றைக்கு அந்த ஆவியின் ஏவுதல் சகோதரன் கிரீனுக்கு இங்கே இடம் பெயர்ந்து வரும்படியாய் உண்டாயிருக்கிறது, அவருக்கும் சகோதரி கிரீனுக்கும் டெக்ஸாஸில் பின்னேயுள்ள கிழக்கு பாகத்தில் பின்னேயுள்ள, தங்களுடைய இடத்தையும் கூட விட்டுவிட்டு, தொடங்கி நடத்த ஒன்றுமேயில்லாமல் இங்கு இருக்கின்றனர்; வெறுமென ஆவியின் ஏவுதலால் எளிமையாய் அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். கிறிஸ்துவின் வழிநடத்துதலை பின்பற்றுகிற மனிதர்களை நான் பாராட்டுகிறேன், அது அவர்களுக்கு என்ன கிரயமானாலும் அந்தக் கிரயத்தைக் குறித்து பொருட்படுத்துவதேயில்லை. முழு உலகமானாலும், உங்களுடைய மிகச்சிறந்த நண்பர்களா யிருந்தாலும், நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்று நினைக்கலாம், ஆனால் அது உங்களுக்குத் தவறாயிருக்கிறதில்லை. அதற்குப் பின்னே ஏதோ ஒன்று உண்டு என்று நீங்கள் உணருகிறவரையிலும், அது உங்களுக்கு தேவனுடைய அசைவாகவே இருக்கிறது; அது ஒருபோதும் தவறாயிருப்பதில்லை; அது எப்பொழுதுமே சரியாக வெற்றியடையச் செய்யும். 13இந்த வாலிப தம்பியினரைப் பாருங்கள், செயற்திறம் வாய்ந்த ஒரு வாலிப மனிதன். அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற காரணத்தால் நான் இதை கூறிக்கொண்டிருக்கவில்லை. இந்த வாலிப பெண்மணி தன்னுடைய குழந்தைகளோடும், முன்னேறும்படியான அவளுடைய குடும்பத்தோடும் இருக்கிறாள், அவர் இங்கு இடம் பெயர்ந்து வருவதற்கு தன்னுடைய வேலை மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் விட்டுவிட்டிருக்கிறார். அநேக வருடங்களுக்கு முன்பு நான் ஊழியத்தில் அழைக்கப்பட்ட போது நான் அதை உணர்ந்தேன். நான் ஒருபோதும் ஒரு வெற்றிக்குரிய போதகனாய் ஆகும் தகுதியை பெற்றிருந்ததில்லை, ஏனென்றால் நான் திட்டமின்றி பயணஞ் செய்கிறவனாய், அலைந்து திரிகிற ஒரு ஆவியை உடையவனாயிருந்தேன். நான் எந்த இடத்திலுமே திருப்தியடைய முடியவில்லை. சரியாக எனக்கு எங்கெல்லாம் ஆவியானவர் அசைவாடு கிறாரோ, அங்கெல்லாம் நான் சரியாக அதனோடு இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிருக்கிறது, ஏனென்றால் எனக்கு ஒரு செய்தி உண்டு. இயேசு, “நான் இதை மற்ற பட்டிணங்களிலும் பிரசங்கிக்க வேண்டும்” என்றார். 14ஆனால் மந்தையைக் கண்காணிக்கின்ற மேய்ப்பர்கள் இருக்கிறார்கள். சகோதரன் பியரி பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றினதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இன்றைக்கு நமக்கு ஒரு கூடாரம் உண்டு. அது சிறிதான ஒன்றாய் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரைக் காண்பதற்கும், தொடங்கி நடத்தவும் அது சரியாய் போதுமானதாய் இருக்கிறது ......... நாம் அறியாமலே சரியாக படிப்படியாய் முன் செல்லுவோமாக. இப்பொழுது தேவன் சகோதரன் மற்றும் சகோதரி கிரீனிடம் இங்கு வரும்படியாக பேசி, இங்கே நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு இடத்தைத் திறந்திருக்கிறார் என்றால், அது ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்களுடைய இருசக்கர மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் வீதிகளை சுற்றி ஓடுவதற்குப் பதிலாக, நம்மோடு சுற்றிலும் உட்கார்ந்து வானொலியில் நாம் கேட்கிற ஏதோ ஒன்றைக் கேட்பதற்கு பதிலாக, அவர்கள் ஆராதிக்க வரும்படியாக ஒரு இடம் உண்டாயிருக்கிறது என்றே நான் நம்புகிறேன், அது சரியானதாய் இருக்கிறது. 15ஆனால் இந்த கூட்ட ஜனங்களான நாம், நமக்கு இந்த நாளுக்கான ஒரு செய்தி உண்டு. நாம், தேவன் நமக்கு ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். மேலும் சகோதரன் கிரீனை, நான் அவரை என்னுடைய கூட்டாளி என்று அழைக்க விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் .... நல்லது, அவர் என்னுடைய கூட்டாளியாயுங்கூட இருக்கிறார். நாங்கள் இந்த செய்தியில் ஒன்றாயிருக்கிறோம். நான் விசுவாசிக்கிற செய்தியை, அதே காரியத்தையே சகோதரர் கிரீன் பிரசங்கிக்கிறார். அவர் தன்னுடைய வீட்டை விட்டுவிட்டார், அவர் தன்னுடைய ஜனங்களை விட்டு விட்டார், அவர் தன்னுடைய சபையை விட்டுவிட்டார். அவர் ஸ்தாபனமொன்றில் ஒரு மாவட்ட கண்காணியாய் அல்லது ஏதோ ஒன்றாக இருந்தார் என்று நான் நம்புகிறேன், அவர் இதை கேட்டபொழுது முழு காரியத்தையுமே விட்டுவிட்டார். இப்பொழுது தேவன் நமக்கு என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அப்படியே ஆதரிப்பதற்கு, அவர் தனக்கு அருமையாயிருந்த ஒவ்வொரு காரியத்தையுங்கூட, வனாந்திரத்திற்கு வருவதற்காக விட்டுவிட்டார். 16அது நம்முடைய இருதயத்தில் இருக்க வேண்டியது மாத்திர மல்லாமல், அது, ஆராதனைகளிலும் கலந்து கொள்வதற்கும், ஆராதிக்க இங்கே வருவதற்கும், தேவன் நமக்காக வெளிப்படுத்த வேண்டியதாய் இருக்கின்ற காரியங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஸ்தலமாய் இதை உருவாக்கவும், நம்மால் முடிந்த ஒவ்வொரு காரியத்திலும் அவருக்கு உதவி செய்வது நம்முடைய கடமையாய் இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறதையே நான் கூறுகிறேன். அவருடைய வார்த்தை கூறினது போல, “செய்தியானது ஆவியின் ஏவுதலில் கொடுக்கப்படுகிறதன் மூலமாய் என்னிடத்தில் வருகிறதில்லை , ஆனால் நம்மில் சிலருக்கு அது அவ்வண்ணமாய் வருகிறதாய் இருக்கலாம்”. மேலும் அவர், “தேவன் என்ன கொடுத்திருக்கிறார் என்பதை ஆதரிக்கவே நான் இங்கிருக்கிறேன்” என்றார். என்ன ஒரு வாக்குமூலம்! நாம் எல்லோரும் ஒன்றாய் ஒத்துழைப்போமானால் நாம் நம்முடைய இருதயங்களை அதற்கு கொடுப்போம் என்று நான் நம்புகிறேன். 17நான் உங்கள் ஒவ்வொருவரையும் அறிவேன், நான் செய்கிறது போன்றே நீங்களும் விருப்பங்கொண்டால், தேவனுடைய ஆவியானவர் அசைவதைக் காண நான் மிகவும் ஆர்வமாயிருக்கிறேன், நான் வெறுமனே அதற்கு நிற்க முடியவில்லை. அதை மீண்டும் ஒருமுறை சரியாக உணரும்படியாக, எனக்கு சரியாக மலையின் மேல் சில அனுபவங்கள் இருந்தன, அதாவது நான் முதலில் இரட்சிக்கப்பட்டிருந்த போது ஏதோ ஒன்று என்னுடைய இருதயத்திற்கு மிகவும் கிருபையுள்ள தாய் இருந்தது! நாம் ஒரு இடத்திற்கு வரமுடியும், நாம் உட்கார முடியும், நாம் மரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நமது மத்தியில் நாம் காண்கிறோம், நான் இங்கே வனாந்திரத்தில் உட்கார்ந்திருக்கின்ற காரணத்தால், நான் என்னுடைய சகோதரர்கள் மத்தியில் தொடர்பு கொள்கிறேன், அவர்கள் என்னோடு பேசுகிறார்கள், நான் அவர்களோடு பேசுகிறேன்; எப்பொழுதும் சற்று உற்று நோக்குகின்ற விதத்திலேயே இருக்கிறேன், அப்படியே அந்த சகோதரனுடைய நிலையைக் காண்பதற்கு அது இருந்தவண்ணமாகவே தவறு என்னவென்பதைக் காண்பதற்கு ஆவியினால் உணருகிறேன். அவை யாவும் சாய்ந்து கொண்டிருக் கிறதையும், ஆவியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறதையும் நான் உணரத் துவங்குகிறேன். அது நமக்கு ஒரு இயல்பானதாகவும் கூட ஆகிவிட்டது. நாம் ஆவியில் ஆராதிக்க வேண்டும், தேவனுடைய ஆவி எங்கேயோ ........ நம்முடைய செய்தியானது கொழுந்து விட்டெரியும் வேளையாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அது நம்முடைய இருதயத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் நாம்- நாம் அதை சரியாக ஜனங்களுக்கு அளிக்க முடியாது. ஆவியானவர் தாமே செய்தியை கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உண்மையான கிறிஸ்தவராக இருப்பீர்கள் என்று நான் நம்பிக்கொண்டும், விசுவாசித்துக்கொண்டுமிருக்கிறேன். 18அவர்களுக்கு ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் தேவையாயிருக்கிறது. அவர்களுக்கு ஒரு ஆசிரியர் தேவையாயிருக்கப்போகிறது. நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளும்படியாக நான் இதைக் கூற விரும்புகிறேன். இது என்னுடைய சபையாய் இருக்கிறது. நான் இங்கு மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். நான் எனக்கு ஒரு திறந்த வாசலை உடையவனாயிருந்தேன். அது சகோதரன் மாக் (Mack) என்னை வந்து பிரசங்கிக்கும்படி கேட்டுக் கொண்டதாகும். தேவன் அவரை ஆசீர்வதிப்பாராக. நான் மற்றெந்த ஜனங்களாலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை; அவர்களுக்கு விரோதமாக ஒன்றுமில்லை, அவர்கள் முழுவதும் சரியாயிருக்கிறார்கள். சகோதரன் பிராக் (Brock) என்னுடைய நல்ல நண்பர், சகோதரன் கில்மோர் (Gilmore), இங்குள்ள இந்த பெந்தேகோஸ்தே சகோதரர்களில் அநேகர் என்னுடைய மிக மிக ஆழமான நல்ல நண்பர்களாயிருக்கின்றனர். நான் அவர்களை நேசிக்கிறேன்; அவர்களுக்கு விரோதமாக ஒன்றுமேயில்லை. நான் அவர்களுடைய ஸ்தானத்தை புரிந்து கொள்கிறேன். அவர்கள் என்னை அங்கே அழைக்க முடியாது, மற்றும் அவர்கள் தங்களுடைய ஸ்தாபனத்தில் தரித்திருக்கிறார்கள். பாருங்கள், அவர்கள் அதைச் செய்யமுடியாது. ஏனென்றால், அவர்கள் அதைச் செய்தால் அவர்கள் வெளியே உதைத்துத் தள்ளப்படுவார்கள். ஆகையால் அவர்களுடைய நிலைமையை நீங்கள் பாருங்கள். நான் அதே காரியத்தை சந்திக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுது இது, “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேடுங்கள்” என்ற தேவனுடைய சித்தமாகவே எப்பொழுதும் இருப்பதாக. 19அதாவது இப்பொழுது, சகோதரன் கிரீனை, தேவன் அவரை இங்கு அனுப்பி, நாம் விசுவாசிக்கின்ற விலையேறப்பெற்ற விசுவாசத்தைப் போன்றதொரு சபையை நமக்கு திறந்து வைத்திருக்கிறார், நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயும், ஒவ்வொரு ஆராதனையிலும் கலந்து கொள்ளுகிறவர்களாயும், நம்மால் முடிந்த ஒவ்வொரு பணியிலும் பொறுப்பெடுத்துக் கொள்ளுபவர்களாயும் இருக்க வேண்டும். நாம் ஜெபிப்பதற்கோ, உதவிசெய்ய முயற்சி செய்வதற்கோ கேட்கப்பட்டு முறையிடப்பட்டால், நாம் சரியாக ........... அதனை செய்வதற்குரிய ஆர்வமுடைய போர்வீரர்களாய் இருப்போமாக. புரிகின்றதா? செய்தியை கனத்திற்குரியதாகவே காத்துக்கொள்ளுங்கள். சரியான விதமான ஜீவியம் ஜீவியுங்கள். அதன் மீது எந்த கறையும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். இப்பொழுது நாம் மிகவும் காலங்கடந்தே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம்- நாம் இந்த வேளையில் மிகவும் காலங்கடந்தே இருக்கிறோம். நாம் இதில் தூய்மையாய் ஜீவிப்போமாக. அதாவது என்னுடைய ஜீவியமும், உங்களுடைய ஜீவியமும், நம்மெல்லாருடைய ஜீவியங்களும் தேவனுக்கு முன்பாக சோதித்தறியப்பட வேண்டியதாய் இருக்கிறது. 20நம்முடைய வாலிப ஜனங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, ஒரு விளையாட்டுக் காட்சியிலிருந்து மற்றொரு விளையாட்டுக் காட்சிக்கு செல்லுகிறார்கள், தூரமாய், தேவனிடத்தி லிருந்து விலகிச் செல்கிறார்கள். அது உண்மை . இப்பொழுது அது உண்மையான செய்தியாய் இருக்கிறது. நான் அதை என்னுடைய பிள்ளைகளில் காண்கிறேன், நானே ஒன்றுமற்ற ஒரு இடத்திற்கு செல்லப் பார்க்கிறேன் ....... நீங்கள், நீங்கள் தேவனை ஆராதிக்க ஒன்றுகூட வேண்டியதாயிருக்கிறது; வேதம், “நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறோமோ அவ்வளவாய் ஒன்றுகூடி வர வேண்டும்” என்ற வண்ணமாக கூறியுள்ளது. இங்கே இருவர் மட்டுமே இருக்கிறார் களென்றால், அவர்களில் நீங்கள் ஒருவராய் இருங்கள். இப்பொழுது அதாவது ....... நாம் ஒன்றாக கூடிவந்து ஒன்று சேர்ந்து ஆராதிப்போ மானால், அப்பொழுது நாம் அதைக் குறித்த மற்ற ஏதோ ஒன்றை பெற தகுதியுடையவர்களாய் இருப்போம், இயேசு, இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன்“ என்றார். 21இப்பொழுது நான் முன்னமே கூறியுள்ளது போன்றே சகோதரன் கிரீன் என்னிடம் கூறினார், அவரே அதைக் கூறினார். நான் தொலைவில் இருந்தபோது, அவர் என்ன கூறினார் என்பதை என்னுடைய மனைவி வந்து என்னிடம் கூறினாள். அதாவது, அவர் இந்தக் காலையில், ''பிரசங்கபீடம் எந்த நேரத்திலுமே திறந்தேயிருந்தது“ என்று கூறினாராம். இப்பொழுது வழக்கமாகவே .......... அது பேசுவதற்கு எனக்காக திறந்தே இருக்கிறது. இப்பொழுது, வழக்கமாகவே, தேவன் எனக்களித்த ஒரு செய்தியை கொடுக்க, அதை ஜனங்களுக்குக் கொண்டு செல்வதற்கு நான் இன்டியானா, ஜெபர்சன்வில்லுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது; தேசத்தினூடாக தொடர்பு கொண்டுள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும், தொலைபேசிக் கம்பிகளில் செய்தியைக் கேட்க இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செய்தியைக் கொண்டு செல்லவே இன்டியானா , ஜெபர்சன்வில்லுக்கு நீண்ட தூரமாய் செல்கிறேன், ஏனென்றால் அதற்காகத் தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், அதற்காகவே நாம் இங்கிருக்கிறோம். நல்லது, இனி அவ்விதம் செய்யவேண்டியதில்லை. தேவன் எனக்கு ஒரு செய்தியை கொடுக்கிறார், நான் இங்கு நேராக பிரசங்கபீடத்திற்கு நடந்து வந்து அதை பிரசங்கிக்க முடிகிறது, அதை தாரளமாகச் செய்ய விரும்புகிறேன். புரிகின்றதா? இப்பொழுது நீங்கள் இந்த சபையில் அப்படியே தொடர்ந்து நிலைத்திருப்பீர் களேயானால், அதனால் சர்வவல்லமையுள்ள தேவன் உங்களை இந்த கூட்ட ஜனங்களை, ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். அது மட்டுமல்ல, ஆனால் நாம் வெளியில் சென்று மற்றவர்களை உள்ளே கொண்டுவர முடியுமா என்று பார்ப்போம். பாருங்கள், நாம் எல்லாவிடத்திலும் மற்றவர்களிடம் பேசுவோம், அவர்களிடத்தில் நம்முடைய சபையைப் பற்றியும், அது என்ன குறிக்கோளை உடையதாய் இருக்கிறதென்றும் பேசுவோம். நம்முடைய சபையில் ......... நாம் இங்கிருக்கிறோம். நீங்கள் வரவும், அந்நியர்களை உள்ளே கொண்டு வரவும் நாங்கள் விரும்புகிறோம், அது நம் எல்லோருக்குமே நன்மையாய் இருக்கும் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன். புரிகின்றதா? நமக்கு ஒரு கட்டிடம் இருக்கிறது, நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் இந்த இடத்திற்காகவும், ஒன்றாக கூடுவதற்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், “ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார், பாருங்கள், 'வானம் எனக்கு சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது? ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்”. நாம் ஒரு கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம். ஆகையால் நாம் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு இடம் பெயர்வது போலவே நம்முடைய செய்தியை கொண்டு செல்கிறோம் என்று நான் நம்புகிறேன், நமக்கு சுகமளிக்கும் ஆராதனைகள் இருக்கின்றபடியால் கீழே இறங்கிச் செல்வோம். ஏதாவது காரியத்தை செய்யும்படி தேவன் நமக்கு வெளிப்படுத்துகிறதை, நாம் அதை சரியாக இங்கேயே சபையிலேயே செய்வோம், இது மிகப்பெரியதாய் விருத்தியடைந்து நீங்கள் இதை எங்கோ கொண்டு செல்லும் வரையில், வேறெங்கோ கொண்டு செல்லும் வரையில் இயேசுவானவர் வரும் வரையில் அதை இங்கேயே செய்வோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 22[சகோதரன் பியரிகிரீன் விளக்கவுரை அளிக்கிறார், அதன் பின்னர் சகோதரன் பிரான்ஹாம் தன்னை நியமனஞ்செய்யும்படி கேட்டுக் கொள்கிறார் - ஆசி.] நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். அன்புள்ள தேவனே, நாங்கள் இங்கே சரியாக இந்த பீடத்தைச் சுட்டிக்காட்டுகிற இந்த மேடையின் மேல் நிற்கையில், நாங்கள் இந்த பூமிக்குரியவர்களாயிருக்கின்ற வரையில், ஒரு மரித்துக் கொண்டிருக்கிற இன மக்களாகவே இருக்கிறோம் என்பதை நாங்கள் உணருகிறோம். நாங்கள் வீதிகளின் மேல் நோக்கிப் பார்க்கிறோம், பாவமானது எங்கும் எழுதப்பட்டிருக்கிறதை காண்கிறோம், அதாவது கர்த்தருடைய மகிமையானது வேகமாக வழி விலகிச் சென்று கொண்டிருக்கிறது. கர்த்தருடைய மகிமையானது செல்லும்போது, அப்படியே அதனோடு சபையும் செல்லும் என்பதை நாங்கள் அறிவோம். தேவனே நாங்கள் அங்கிருக்க விரும்புகிறோம். சரியாக ஒரு சில நாட்களுக்கு முன்பு, இங்கே வீதியின் ஓரத்தில் நின்றுகொண்டு, அப்படியே வீதியினூடாக, வீதியில் அந்த இராணுவ படையணியின் ஊர்வலத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்; அந்த பண்டைய முதல் யுத்த பீரங்கி வண்டிகள் வழியில் முதலில் செல்ல, பின்னர் பெரிய பாரமான ஷெர்மன் (Sherman) பீரங்கி வண்டி வர, அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து செல்ல, அதன் பின்னர் தங்க நட்சத்திர பதக்கம் பெற்ற தாய்மார்களையும்; நொறுங்குண்ட சிறு குடும்பத்தையும், கதறிக்கொண்டிருந்த ஒரு மனைவியோடு தன்னுடைய தந்தையை இழந்த ஒரு சிறு கந்தையணிந்த பையனையும், ஒரு மகனை இழந்த ஒரு வயோதிக தாயையும் கண்டேன். ஓ, அந்த விதமாய் நேரிடுகின்ற ஒன்றை வீதியின் ஓரத்தில் நின்று கவனிப்பது எவ்வளவு வருந்தத்தக்கதாய் உள்ளது. அதன் பின்னர், அவர்கள் அப்படியே இந்த கட்டிடத்தைக் கடந்து சென்றபோது, “கிறிஸ்தவ போர் வீரர்களே முன் செல்லுங்கள்” என்ற பாடலுக்கு இசையானது மாறினது. அவர்களுடைய அணிவகுப்புகளுக்கு பின்னாக வாசித்துக் கொண்டிருந்தனர்; ஆனால் அவர்கள் இந்த இடத்தைக் கடந்தபோதோ! 23அன்புள்ள தேவனே, நான் வருகின்றதான மற்றொரு மகத்தான நேரத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அது உயிர்த்தெழுதலாய் இருக்கும், அப்பொழுது முதலாவதாக பரிசுத்தவான் களும், கோத்திரப் பிதாக்களுமான பண்டைய காலத்தவர்கள் வெளியே வருவார்கள். “ஏனெனில் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர் களுக்கு முந்திக் கொள்வதில்லை அல்லது தடை செய்வதில்லை; தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்”. அப்பொழுது நாம் அந்த மகத்தான ........ அந்த ஜனங்கள் செல்வதை ஆகாயத்தினூடாக அணிவகுத்துச் செல்வதைக் காணும்போது, நாமோ நின்றுகொண்டு நம்முடைய மறுரூபமாகுதலுக்காக காத்துக்கொண்டிருப்போம், நாமும் கூட வரிசையில் செல்வோம் என்பதை அறிந்து கொள்வோம். தேவனே எங்களை விசுவாசமுள்ள போர்வீரர்களாக்கும். 24உண்மையிலே போரில் இருந்து பங்குகொண்டிருந்தவர்கள் மட்டுமே அந்த பீரங்கி வண்டிகள் உருண்டோடிச் செல்வதைக் கண்டு, அது உண்மையாகவே என்னத்தை சுட்டிக்காட்டுகிறது என்பதை அறிந்து கொள்வர். தேவனே, நாங்கள் எங்களுடைய வரிசையில் பங்குபெறும் படியாயுள்ள நிலையிலும், ஸ்தானத்திலும் உயிர்த்தெழுதலில் மேலே செல்வதற்கு காத்துக் கொண்டிருக்கையில், வாழ்க்கையின் யுத்தத்தில் இருந்து வருகிறவர்கள் அது எதைக் குறித்துக் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்வர் என்றே நாங்கள் நினைக்கிறோம். இந்த என்னுடைய வாலிப சகோதரன் நன்றாய் பயிற்றுவிக்கப் பட்டு, ஆயத்தமாய், ஆடையணிந்தவராய், ஒரு வயோதிப மனிதன் அவர் மேல் கரங்களை வைப்பதற்காகவே காத்துக் கொண்டும், அங்கே முன்வரிசையில் ஒரு நீடித்த அனுபவமுடைய வயதான போர்வீரன் ஒருவர் இருக்க, அவரும் கூட யுத்தத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவராய் இங்கே நிற்கிறார். அன்புள்ள தேவனே, இந்த தகுதியற்ற கரங்களினால் நான் என்னுடைய சகோதரன் மீது உம்முடைய பிரதிநிதித்துவத்தில் கரங்களை வைக்கிறேன். சகோதரன் கிரீனை ஆசீர்வதியும், அன்புள்ள தேவனே நான் இயேசுவின் நாமத்தில் அவரை ஆசீர்வதிக்கிறேன். கர்த்தாவே, இந்தப் பட்டிணத்திற்குள்ளும் மற்றும் எங்கெல்லாம் நீர் அவரை அழைக்கிறீரோ அங்கெல்லாம் அவர் இந்த செய்தியை கொண்டு செல்வாராக. அவர் கடமை தவறாதவராயும், ஆவியினால் நிரப்பப்பட்டவராயும், நிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு ஜீவியம் ஜீவிப்பவராயுமிருப்பாராக. தேவனே, அவர் ஜனங்களுக்கு போதிக்கும் படியாகவும், வழிநடத்தும்படியாகவும், நாங்கள் எல்லோரும் நடக்க வாஞ்சிக்கிற பாதையில் அவர்களுக்கு திசைகாட்டும்படியாய், அவர்களுடைய இருதயங்களில் அவர் இருப்பாராக. இதை அருளும் கர்த்தாவே. அவருடைய விசுவாசமுள்ள மனைவியையும், அவருடைய சிறிய பிள்ளைகளையும் ஆசீர்வதியும். நாங்கள் உலகத்தின் முடிவுபரியந்தம் இந்த சுவிசேஷத்தை கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக இங்கே பூமியின் மேல் கிறிஸ்தவ சகோதரர்களாய் இருக்கின்ற காரணத்தால் இங்கே கூடியுள்ள எங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதியும். தேவனே உம்முடைய ஆவியை அவர் மீது அனுப்பும். நாங்கள் அவரை உம்மண்டை ஒப்புவிக்கின்றபடியால், நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். சகோதரன் பியரி தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய வார்த்தையை கொண்டு செல்லுங்கள்!